'பன்மொழிப் புலவர்' கா.அப்பாத்துரையார் (1907 - 1989)
'பன்மொழிப் புலவர்' கா.அப்பாத்துரையார் (1907 - 1989)
அறிமுகம்
கா.அப்பாத்துரை ஜூன் 24, 1907-ம் ஆண்டு குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் பிறந்தார். தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநரான இவர் பன்மொழிப் புலவர் எனப் பெயர் பெற்றார். அப்பாத்துரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை இருந்தது.
தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் ஒரே ஆண்டில் முதுகலைத் தேர்ச்சி பெற்றார். இந்தி மொழியில் விசாரத் பட்டம் பெற்றார். இவை தவிர இன்னும் பல வேற்று மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார்.
தமிழ்ப் பணி
- தமிழும் தமிழரினமுமே உலக மொழிகளுக்கும் மனித இனத்திற்கும் முன்னோடிகள் என்னும் தனது கோட்பாட்டை அறிவியற்பூர்வமாகத் தனது ஆய்வுகள் மூலம் முன்வைத்தார்.
- சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959 முதல் 1965 வரை அதன் ஆசிரியராகச் செயல்பட்டார்.
படைப்புகள்
- அப்பாத்துரையார் அவர் எழுதிய நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நூல்களுள் ‘குமரிக் கண்டம்’ அல்லது ‘கடல் கொண்ட தென்னாடு மற்றும் தென்னாட்டுப் போர்க்களங்கள்’ ஆகியவை தலையாயனவாகக் கருதப்படுகின்றன.
- தென்னாட்டுப் போர்க்களங்கள்
- கிருஷ்ணதேவ ராயர்
- வெற்றித் திருநகர்
- சரித்திரம் பேசுகிறது; 1955.
- மருதூர் மாணிக்கம்; 1955
- தென்னாடு, 1954
- இந்தியாவின் மொழிச்சிக்கல்’ என்ற நூலைப் படைத்தார்.
- காற்றும் மழையும் (நாடகம்) (சிலம்பு நாடக மன்றத்தால் சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் அண்ணாதுரை தலைமையில் 22-4-56ஆம் நாள் அரங்கேற்றப்பட்டது)
மொழிபெயர்ப்பு
- கார்ல் மார்க்ஸ் அவர்களின் மூலதனத்தைத் தமிழில் முதன் முதலாக மொழிபெயர்த்தவர்.
- வி. கனகசபை அவர்களின் ஆங்கில நூலான “The Tamils Eighteen Hundred Years Ago”-தமிழில் “ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்” -என்ற பெயரில் மொழி பெயர்த்தார்.
விருதுகள்/சிறபபுகள்
- பல வேற்று மொழிகளிலும் புலமை பெற்று விளங்கியதால் அறிஞர் பெருமக்கள் அவருக்குப் "பன்மொழிப்புலவர்" என்ற பட்டத்தைச் சூட்டினார்கள்.